விருதுநகர் மாவட்டம் :-
திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . நமசிவாயம் தலைமை தாங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி , சார்பு ஆய்வாளர் திரு பாபு , திரு.கருத்தபாண்டி மற்றும் நகர் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.நமசிவாயம் பேசும்போது பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ பிரச்சினை இருந்தால் காவல் துறையினரை அனுக வேண்டும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க காவல் துறை என்றும் துணை நிற்கும்.
பாதுகாப்பு தேவையை கருத்தில்கொண்டுமேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளரின் செல்போன் நம்பரை வழங்குகின்றோம் என்று தெரிவித்தார்.
உங்களுக்கு பிரச்சினை என்றால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் நாங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் தகவல் சொல்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு மாணவ மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகம் மத்திய மாநில அரசால் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு அமலில் இருப்பதை அறிந்து சமூக இடைவெளியை பின்பற்றி
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
