
நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள்
அந்தியூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்சியில் நீதிபதியின் நெகிழ்சியான பேச்சை கேட்டு மாணவர்கள் கண்கலங்கி அழுதனர்
ஈரோடு மாவட்ட நீதிதுறை நிர்வாகதுறை காவல்துறை இணைந்து அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது இதில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார்
அதன்படி மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார் நான் சொல்லும் வரை யாரும் கண்களை திறக்கக்கூடாது என்றவர் தொடர்ந்து பேசினார்
அப்போது உங்களுக்கு ஓட்டுவீடாவது இருக்கிறதா? அந்தவீடு ஒழுகாமல் உள்ளதா? நேற்றிரவு உங்கள் அப்பா என்ன சாப்பிட்டார் அவர் சாப்பிட்டாரா இல்லை சாப்பிடாமல் தூங்கினாரா உங்கள் அப்பாவின் உள்ளங்கைகளை பார்த்தீர்களா?
முதலாளி அவமானப்படுத்தினாலும் அந்த வலியை உங்களிடம் என்றாவது சொல்லியிருக்கிறாரா? தீபாவளி பொங்கல் பண்டிகைகளில் புதுத்துணி அணிந்திருக்கிறாரா? உங்கள் அப்பா உங்களுக்காக உடலை உருக்கியிருக்கிறாரா? என்று நீதிபதி பேச்சை தொடர ஒரு கட்டத்தில் மாணவ மாணவியர் பலரும் கண் கலங்கி அழத்தொடங்கினர்.
தொடர்ந்து தன் பேச்சை முடித்த நீதிபதி பெற்றோர் பெருமைபடும் வகையில் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
