
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்தார்
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,விபத்துக்களை தடுக்கவும் நவீனமயமாக்கப்பட்ட புதிய காவல் உதவி மையம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் IPS., அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதில்
1)தொலைவில் வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமிக்கைக்கு ஏற்ப ஒளிரும் LED STRIP –க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2) போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களின் எண்களை எளிதில் படம் எடுக்கும் வகையில் Automatic Number Plate Recognition Camera (ANPR)பொருத்தப்பட்டுள்ளது.
3) போக்குவரத்து சமிக்கையை எளிதாக கையாளும் வகையில் Radio Frequency Remote Control Signal புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4) பொதுமக்களுக்கு போக்குவத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய விழிப்புணர்வுகள் அடங்கிய பதாகைகள் காவல் உதவி மையத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
