
மதுரை விளக்குத்தூண் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் திறப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கோபுரங்கள் திறப்பு:
மதுரை மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைவில் அடையாளம் காண்பதற்காகவும் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயங்களில் அவற்றை கண்காணித்து பொதுமக்கள் சிரமமின்றி தீபாவளி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் மதுரை விளக்குத்தூண் பகுதியில் 9 கண்காணிப்பு கோபுரங்களை துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவல் உதவி மையங்கள் – 5, சி.சி.டி.வி. கேமராக்கள் -85, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை தெரிவிக்க ஒலிபெருக்கி கோபுரங்கள் – 15, கூட்ட நெரிசலை கண்காணிக்க LED Display –க்கள் உட்பட 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
