Police Recruitment

அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று(10. 11. 23) மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று(10. 11. 23) மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் பட்டாசு வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய், உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்வேல் அவர்களும், உதவி காவல் ஆய்வாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய் மாணவ மாணவியர்கள் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என பேசி அறிவுரை வழங்கினார். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களும் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக விழிகள் நிறுவனர் ஜோயல் செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட லாரி சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.