பாலக்கோடு மணியகாரன் கொட்டாய் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சாவு. மற்றொருவர் படுகாயம்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்லா தெருவை சேர்ந்த அப்துல்பாரி என்பவரின் மகன்
சதாம் உசேன் (வயது.26)
இவர் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்கசமுத்திரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார்,
நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்,
வழியில் பாலக்கோட்டை சேர்ந்த கருனாகரன் (வயது .22) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்த போது பாலக்கோடு அருகே
மணியக்காரன் கொட்டாய் மேம்பாலம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது,
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
படுகாயமடைந்த கருணாகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சதாம் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.