Police Recruitment

மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இன்று (22.11.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 317 மனுக்கள் பெறப்பட்டன. அதில்‌ சிறு கொடுக்கல்‌ வாங்கல்‌ பிரச்சனைகள்‌, குடும்பபிரச்சனைகள்‌, வாய்தகராறு பிரச்சனைகள்‌ உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகள் சம்மந்தப்பட்ட 206 மனுக்கள்‌ தீர்வு செய்யப்பட்டு 4 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டன. மேலும்‌ புதிதாக காவல்‌ ஆணையர்‌ அவர்களிடம்‌ நேரடியாக 56 மனுக்கள்‌ கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார்.காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.A. பிரதீப் IPS., காவல்துணை ஆணையர் (வடக்கு) திருமதி.Dr.புக்யா சினேக பிரியா IPS., காவல்துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.