தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே குட்கா விற்ற 18 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
குறிப்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த சுமார் 8 கிலோ மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி கள் மூலமாக கடைகள் சீல் வைப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.