
ரூ.1 கோடி ஹவாலா பணம்!பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!
ஆட்டோவில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வந்த நிலையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சாமத்தியம் காரணமாக மூன்று பேர்களை காவல்துறையினர் பிடித்தனர்.
சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜ் என்பவரின் ஆட்டோவில் ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பேரை சவாரியாக ஏறியுள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டு வந்ததிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் கடத்துகின்றனர் என்பதை ஆட்டோ டிரைவர் கண்டுபிடித்து உடனே திடீரென ஆட்டோவை அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற அவர் போலீசாரிடம் தனது சந்தேகத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆட்டோவில் இருந்த மூவரிடமும் போலீசார் விசாரணை செய்து, மூவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
