
கைது என்றால் என்ன? கைது செய்வதெப்படி?
கைது என்பதற்கு சட்டத்திலோ விதியிலோ சரியான விளக்கம் ஏதுமில்லை இதற்கான வரையறையை கொண்டு வருவது அவசியம்.
சரி சட்டத்தில் கொண்டுவரும்வரை நாம் இப்படி எடுத்து கொள்ளலாம்.
ஒரு செயலை ஒருவர் செய்தால் அல்லது செய்யாமல் இருந்தால் ஏற்படும் குற்றத்திற்காக அல்லது நடைபெற்ற குற்றத்திற்காக அவரை சட்ட வழியிலான முறையில் விசாரணை செய்து தண்டிக்கும் நோக்கத்திற்காக அவரை தேவையான அளவிற்கு தடுத்து நிறுத்தி ஓரிடத்தில் அடைத்து வைக்கும் செயலை கைது என எடுத்து கொள்ளலாம்.
கைது என்றாலே சினிமாவில் வருவது போல் நடு ரோட்டில் ஜட்டியோடு அழைத்து செல்லுவது அல்ல.
சட்டப்படி கைது என்றால் வாய் மொழி உத்தரவிலே
கைது செய்யப்பட வேண்டும் அப்படி வாய்மொழி உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்தால் மட்டுமே தேவையான அளவிற்கு மட்டும் பலத்தை உபயோகித்து கைது செய்ய வேண்டிய நபரை உடலை தொட்டு காவலில் அடைப்பதுதான் கைதாகும் என கு.வி.மு.சட்டம் பிரிவு 46 அறிவுறுத்துகிறது.
