குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பாதிக்கப்பட்டவரின் சொத்து
குற்றவியலில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் இதற்கான வழிவகைகள் சிறைச்சாலை சட்டத்தில் இருப்பதாக. கூறுகிறார்கள் ஆனால் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.
பெரும்பாலும் கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை வருமானத்திற்குரிய தொழிலாகவே செய்து வருகின்றனர் இவர்களை திருத்துவதற்கு ஒரே வழி அவர்களை சிறையில் கூலி வேலை செய்ய வைத்து அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கொலையுண்டவர் எப்படி உயிருடன் இருந்திருந்தால் அந்த குடும்பத்துக்கு பொருளாதார வழியில் உதவியாக இருந்திருப்பாரோ அதே போல் கைதிகளின் உழைப்பால் கிடைக்கும் பணபலனை பாதிக்கப்பட்டவர் அடையும்படி செய்திடுவதற்கான சட்ட விதிகள் கொண்டு வர வேண்டும்
அப்போது மட்டுமே குற்றத்தை தொழிலாக புரிபவர்களை திருத்த முடியும்
பொதுவாக சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கும் தண்டனையில் அப்படி விதிக்கப்படும் அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு தர வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் குற்ற விசாரணை முறை விதி 357 வது பிரிவில் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் தண்டனையில் அபராதம் விதிக்க வழியில்லாத போது கூட ஒரு குறிப்பிட்ட தொகையை பாதிக்கப்பட்டவருக்கு குற்றவாளி கொடுக்க வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு