
அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த கும்பல்… பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் கண்ணீர்
கோவையை சேர்ந்த 43 வயதான நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பினார். இதற்காக இவர் ஆன்லைனில் வெளியான பல்வேறு தகவல்களை தேடி பார்த்தார்.
பின்னர் ஒரு செயலியில் வெளியான ஆயுர்வேத மசாஜ் குறித்த விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை காட்டி பல்வேறு விபரங்களை கேட்ட நபர், 8.25 லட்சம் ரூபாய் பெற்றார்.
ஆனால் ஆயுர்வேத மசாஜ் தரவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டது, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சேரன் நகரை சேர்ந்த ஹரிபிரசாத்(31) மற்றும் அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மகேந்திரன், தேவம்பட்டி சக்திவேல்(26), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி(23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(24), மற்றொரு சக்திவேல்(29), ஜெயபாரதி(22), மகேந்திரன்(30), கோகுல்(31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
அப்போது அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.
