Police Department News

ரூ.6000 யாருக்கெல்லாம்?… அரசாணை வெளியீடு

ரூ.6000 யாருக்கெல்லாம்?… அரசாணை வெளியீடு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-

  • சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6000 வழங்கப்படும்.
  • புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து பொருட்களை இழந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிதி வழங்கப்படும்.
  • அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும்.
  • கூட்டுறவு சங்கப் பதிவாளர், நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல் துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
  • நிவாரணத் தொகை ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.
  • டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.