S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்.
ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதி ரூபாய் 10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு. சீமான் மற்றும் பெண்சார்பு ஆய்வாளர் திருமதி. பேரரசி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.