விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் போதை பழக்கம் மாணவர்களை நெருங்காது- சைலேந்திரபாபு அறிவுரை
தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்தவர் சைலேந்திர பாபு.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்றியவர்.
இதற்கு பிறகு, ஓய்வு பெற்ற நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இதற்கு ஆளுநர் தரப்பில் முட்டுக்கட்டை போடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்தவாறே உள்ளன.
எனினும், நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றுள்ளதுடன், பெரிதாக சர்ச்சைகளிலும் சிக்காதவராக உள்ளார் சைலேந்திர பாபு.. இந்நிலையில், சொந்தமாக “சைலேந்திரபாபு 2.0” என்ற யூடியூப் சேனலை இவர் ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சேனலில், தான் இதுவரை காவல்துறையில் சந்தித்த சவால்கள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை அனுபவமாக, இந்த சேனலில் பகிர்ந்து கொள்ள போகிறார். மேலும், மாணவர்களுக்காக பலமுறை உற்சாகமூட்டும் வகையில் பேசும், இவரது மோடிவேஷனல் பேச்சுக்கள் மிகவும் பிரபலம் என்பதால், அவரது இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
பாத்துரலாமா?” என்று முதல் வீடியோவை பேசி, யூடியூப் நேயர்களை கவர்ந்திருந்தார். அதேபோல, 100 நாட்கள் ஓட்டப்பந்தய சேலஞ்சுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்து, 2வது வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விளையாட்டுதுறையில் மாணவர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளர் சைலேந்திரபாபு.. சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.. அப்போது பேசும்போது, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்றாக பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்..
பிறகு செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு பேசியபோது, “தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.. அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது” என்றார்