டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது
UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Payments: கூகுள் பே, ஃபோன்பே, பாரத் பே, பேடிஎம் அல்லது வேறு வழிகளில் யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இவற்றில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். இதன் கீழ் ஐயாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு புதிய எச்சரிக்கை முறைமையை அறிமுகப்படுத்தப்படும். இதில், ஒரு பயனரோ அல்லது வணிகரோ இந்த தொகையை விட அதிகமாக UPI மூலம் பணம் செலுத்தினால், அவருக்கு அழைப்பு அல்லது SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு இந்த பரிவர்த்தனையை சரிபார்க்கும்படி கேட்கப்படும். சரிபார்த்த பின்னரே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.