

போக்கு வரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மரகன்று துணிப்பை வழங்கி கௌரவித்த மதுரை போக்குவரத்து காவல் துறை
27.07.22 புதன் கிழமை காலை 10.00 மணி யளவில் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே… முன்னாள் ஜனாதிபதி டாக்டர் apj அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவு நாளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது. மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன் அவர்கள் மற்றும் ,மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி, ஆகியோர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
