Police Department News

வெள்ள நிவாரணம்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை

வெள்ள நிவாரணம்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை

பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேலும், ” நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது. நேரமும் மிச்சமாகும்.
மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்” என சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி யோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.