பெங்களூரில்.. 643 முறை பைக்கில் டிராபிக் விதிமீறிய பெண்! எடுக்கப்பட்ட ஆக்சன் என்ன தெரியுமா? ஷாக்
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண்ணின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர் செய்த தவறு நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
₹3.2 லட்சம் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனத்தை திரும்ப அளிப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்
விதிமீறல் வழக்குகள்; போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, அந்த பைக் மீது 643 போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் நிலுவையில் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி போடப்பட்ட விதிமீறல் வழக்குகள்.
அந்த பெண் ஹெல்மெட் அணியாமல் பல பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றதால் பிடிபட்டதால், அவரின் இரு சக்கர வாகன நம்பருக்கு பல அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் நீல நிற ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வது போக்குவரத்து கேமராக்களில் பதிவாகியுள்ளது. பல முறை அதே சாலையில் இவர் ஹெல்மெட் இன்றி சென்றுள்ளார்.
அந்த ஸ்கூட்டர் கங்காநகரில் வசிக்கும் பெண் ஒருவருக்கு சொந்தமானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்த இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வெவ்வேறு நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். அந்த பெண் என்று இல்லாமல் அதை எடுத்து ஓட்ட கூடிய மற்றவர்களும் விதிகளை மீறி உள்ளனர்.
அந்த பெண் மீது கொடுக்கப்பட்ட செல்லான் எதற்கும், அவர் பைன் அடைக்கவில்லை. வாகனத்தின் தற்போதைய மதிப்பை விட அபராதம் அதிகம் என்று கூறப்படுகிறது. 3.22 லட்சம் ரூபாய் அபராதம் என்பது கடுமையான அபராதம் என்று நெட்டிசன்கள் பலரும் குறிப்பிட்டு உள்ளனர். ஒரு விதி மீறலுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டு ள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுப்பதில் தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு ஒரு வலிமையான கருவியாகும். பெங்களூரு போக்குவரத்து போலீசார் இப்போது நகரின் பெரும்பாலான போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை AI- இயங்கும் கேமராக்களைப் பயன்படுத்தி பதிவு செய்து வருகின்றனர்.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ஐடிஎம்எஸ்) அறிமுகப்படுத்தியுள்ளனர். அங்கு போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, சலான்களை வழங்க செயற்கை நுண்ணறிவு-செயல்படுத்தப்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்பிறகு, மீறுபவர்களின் மொபைல் போன்களுக்கு தானாக சலான்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பெங்களூரு முழுவதும் பல்வேறு போக்குவரத்து சந்திப்புகளில் ஐடிஎம்எஸ் செயல்படுத்தப்பட்டது. இந்த கேமராக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், மூன்று பேர் ஒன்றாக பயணம் செய்தல், சிவப்பு விளக்கு மீறல், வேக வரம்பு மீறல், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துதல் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்ற வழக்குகளை பதிவு செய்யும்.
அதன்படி பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண்ணின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர் செய்த தவறு நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஸ்கூட்டியை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அபராதத்தை கட்டும் வரை பைக்கை கொடுக்க முடியாது என்று போலீசார் கூறியுள்ளனர். ஸ்கூட்டியின் விலையை விட அபராத தொகை 4 மடங்கு அதிகம் என சிக்கிய அந்த பெண் குமுறி உள்ளார்.