
புறம்போக்கு நிலத்திற்காக அடிதடி… கட்டட தொழிலாளி படுகொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்…!
திண்டுக்கல் அருகே புறம்போக்கு நிலத்தை யார் பயன்படுத்துவது என்ற முன்விரோதத்தில் சித்திக்கு ஆதரவாக இருந்த கட்டிடத் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வன்னிய பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெரியசாமி. சில மாதங்களுக்கு முன்னர் பெரியசாமியின் சித்தி மருதாயி என்பவருக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் புறம்போக்கு இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது தனது சித்திக்கு ஆதரவாக நின்ற பெரியசாமி, செந்தில்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் செந்தில்குமாருக்கும் பெரியசாமிக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஊரில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியின்போது பெரியசாமிக்கும் செந்தில்குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பெரியசாமியின் தலையில் கல்லால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் தாலுகா போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை
இந்நிலையில் பெரியசாமியை கொலை செய்ய தனது நண்பர்கள் வன்னியபாறைபட்டியை சேர்ந்த ரமேஷ், ராஜேஷ் கண்ணன், பொன்னகரத்தைச் சேர்ந்த சிவபாண்டி ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார் செந்தில்குமார்.
இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், ரமேஷ், ராஜேஷ் கண்ணன், சிவபாண்டி ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
