
மக்களுடன் முதல்வர், மதுரை மாநகராட்சி மண்டலம் 1,கிழக்கு. 17, 18 வார்டுகளுக்கான குறை கேட்கும் கூட்டம்
மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை நன்கு உணர்ந்த நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற குறை கேட்கும் முகாமை நடத்தி அதில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தருகிறார் அந்த வகையில் வருகிற 6ம் தேதி சனிக்கிழமை மதுரை மாநகராட்சி மண்டலம் 1, கிழக்கு மண்டலம் வார்டு 17, 18ல் மக்களுடன் முதல்வர் முகாம் மதுரை ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அது சமயம் 17, 18 வார்டு பொதுமக்கள் தங்களின் குறைகளை மற்றும் கோரிக்கைககளை மனுவாக கொடுத்தும் மற்றும் அவைகளை கணினியில் பதிய வேண்டியிருப்பின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் முகாமிற்கு வரும்படி 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்
