








விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை காவல் துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, STRN உயர்நிலை பள்ளி, கோவிலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி,ஆகிய பள்ளிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் மாணவர்கள், தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், கிராமநிர்வாக அலுவலர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தி உதவி
S.ரெங்கசாமி
