தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோவில் குமரெட்டியாபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த பம்பையன் மகன் மாரிமுத்து வயது 46, என்பவருக்கும், அவரது உறவினரான சித்தன் மகன் சின்னஅழகுமலை வயது 45, என்பவருக்கும் பொது பாதை பயன்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு அது முன் பகை இருந்து வந்தது, மேற்படி முன் விரோதம் காரணமாக நேற்று எதிரி சின்னஅழகுமலை வாதி மாரிமுத்துவை கம்பால் முதுகில் அடித்து காயம் ஏற்படுத்தி பின் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து இத்தோடு செத்து தொலை என்று தலையில் வெட்டியுள்ளான். அதற்குள் அருகிலிருந்தவர்கள் தடுத்து மாரிமுத்துவை காப்பாற்றியுள்ளனர். இதில் மாரிமுத்துவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து காயம்பட்ட மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் காடல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பந்தப்பட்ட எதிரியை உடனே கைது செய்யுமாறு விளாத்திக்கும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமதி.கலா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. செல்லத்துரை மற்றும் போலீசார் இன்று எதிரி சின்னஅழகுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.