
மதுரை பயணி தவற விட்ட நகை அலைபேசிகளை மீட்டுக் கொடுத்த ரெயில்வே போலீசார்
திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷனில் மதுரை பயணி ராம்பிரசாத்குமார் வயது 35, தவற விட்ட நகை அலைபேசிகளை ரயில்வே போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை திருநகர் சீனிவாச காலனியை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராம்பிரசாத்குமார் நேற்று முன்தினம் பணி காரணமாக சேலத்திற்கு சென்ற ராம்பிரசாத்குமார் நேற்று ரெயில் மூலம் திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷன் வந்தார். 2 வது பிளாட்பாரத்தில் மதுரை ரெயிலுக்காக காத்திருந்தவர்
சாப்பிட தன் கொண்டுவந்த பேக்கை பிளாட்பாரத்தில் வைத்துள்ளார் சாப்பிட்ட பின் பேக்கை மறந்து விட்டு ரெயிலில் ஏறி மதுரை சென்றார்
ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளச்சாமி எஸ்.ஐ., அருணோதயம் போலீஸ்காரர் ராஜேஸ்குமார் பிளாட்பார ரோந்து பணியில் ஈடுபட்ட போது
பேக்கை சோதனையிட்டனர் அதில் 2 பவுன் செயின் ஒன்றரை பவுன் மோதிரம் 2 அலைபேசிகள் பர்ஸ் இருந்தது. அதிலிருந்த தொலை பேசி எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட போது ராம்பிரசாத்குமார் மனைவி நந்தினி பேசினார் அதன் பிறகு ராம்பிரசாத்குமாரை வரவழைத்து போலிசார் நகை அலைபேசிகளை ஒப்படைத்தனர்.
