மதுரை மேலமாரட்டு வீதி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் கைது
மதுரை மேலமாரட்டுவீதி பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திடீர்நகர் 3 வது பிளாக்கை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 47 இவர் மேலமாரட் வீதியில் பூ கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த இரு வாலிபர்கள் வாராந்திர மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். மணிகண்டன் கொடுக்க மறுத்ததால் வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து திடீர்நகர் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் மிரட்டியவர்கள் ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரபாண்டி வயது 22, குரு வயது 26, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.