குற்றங்களை தடுக்க மூன்று புதிய செயலிகள் டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பருந்து மற்றும் ஒருங்கிணைந்த வாகனக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் நிவாரணம் என மூன்று புதிய செயலிகளின் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர் காவல் ஆணையர் திரு. சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்ஹா , அஸ்ரா கார்க் சுதாகர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவீனப்படுத்தப்பட்ட பருந்து செயலி.
சென்னை மாநகர காவல் எல்லையில் 104 காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சாதாரண குற்றவாளிகளின் விபரங்களை பதிவு செய்யும் வசதி 24 மணி நேரமும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தளமாக இந்த செயலி உள்ளது
இந்த செயலி ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்காப்பட்டுள்து குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்படும் போதும் ஜாமின் மனு தாக்கல் செய்யும் போதும் ஜாமின் வழங்ப்படும் போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை இந்த செயலி அனுப்பும் இதனால் குற்றவாளிகளின் தொடர்புடைய வழக்கு களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு செயலி
சென்னை மற்றும் இதர இடங்களில்
காணாமல் போன மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கவும் திருட்டு வாகனங்களை செயின் செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளையில் குற்றவாளிகள் பயன்பத்துவதை தடுக்க மாநகர காவல்துறை சார்பாக 1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு என்ற புதிய செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிவாரண செயலி
சென்னை காவல் துறையில் காவல் நிலையங்கள் காவல் அதிகாரிகள் இணையதள மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும் விசாரணை முறைகள் நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் நிவாரண செயலி தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தந்தப்பட்ட நபர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அளிக்கப்படும் இந்த செயலி அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில் இன்னும் சென்னையில் பாதுகாப்புக்காக 2 அல்லது 3 புதிய திட்டங்கள் வர உள்ளது என்றார்.