

பாலக்கோடு, பிப்ரவரி, 5. திங்கட்கிழமை இன்று மாலை 6 மணிக்கு,
கசியம்பட்டி நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீ பிடித்து எரிந்ததில் மருந்து கடை உரிமையார் சம்பவ இடத்திலேயே பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது.32)
இவர் அதே பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமமனமாகி நித்யா என்ற மனைவி உள்ளார்.
மனைவி கோயமுத்தூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு சென்றிருந்தார்.
அவரை அழைத்து வர இன்று பிப்ரவரி 5, திங்கட்கிழமை மாலை 5 மணி சுமாருக்கு, இராயக்கோட்டையில் இருந்து கோயமுத்துர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்,
பாலக்கோடு அடுத்த கசியம்பட்டி அருேக சென்று கொண்டிருந்த போது,
கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி சாலை பக்கவாட்டிற்க்கு சென்றது.
இதில் காரின் என்ஜின் தீப்பற்றி எரிய தொடங்கியது, உடனடியாக காரை விட்டு வெளியே வர முயன்றுள்ளார்.
காரிலிருந்து இறங்குவதற்க்குள்,
தீ வேகமாக பரவி கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது,
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயைணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்க்குள் சஞ்சீவ் தீயில் கருகி காருக்குள்ளேயே உயிரிழந்தார்,
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இறந்த சஞ்சீவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.