Police Department News

தேர்வு எழுத காரணமாக இருந்த இரண்டு காவலர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வேண்டிய +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவன் மட்டும் நேரம் 9:50 ஆகியும் இன்னும் வரவில்லை என்று கூறினார்.
உடனே காவலர் மதன் மாணவரின் விலாசம் நான்ங்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்கோடிபாக்கம் என்று கேட்டறிந்து, அந்த ஊர் பக்கம் பகல் ரோந்து காவலர் யார் என்று காவல் நிலையத்தில் Si விஜயகுமார் அவர்களிடம் கேட்டு விசாரித்து, உடனே அந்த காவலர் Pc 260 மணிகன்டன் என்பவருக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனே காவலர் மணிகன்டன் சிறிது தொலைவில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவரை சந்தித்து ஏன் தேர்வு எழத செல்லவில்லை என கேட்க, அவரின் பெற்றோருடன் சண்டையிட்டு அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் மறுத்திருக்கிறான் என்பது தெரியவந்தது.
உடனே காவலர் Pc மணிகன்டன் நேரமின்மையை கருத்தில் கொண்டு மாணவனை சமாதானபடுத்தி தனது இருசக்கர வாகனத்தில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்து வந்து அறிவுரை கூறி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் 10மணிக்கு மேல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டான். பின்னர் மாணவன் நல்ல முறையில் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்து காவலர் மணிகன்டன் அவர்களுக்கும், இதற்கு காரணமாய் இருந்த Gr,I Pc மதன் அவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து நெகிழ்சியுடன் சென்றான் மாணவன் மோனிஷ்.
தேர்வு எழுத காரணமாக இருந்த இரண்டு காவலர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.