
காவல்துறையில் 4 ஆண்டில் 1347 பேர் பலி
தமிழக காவல்துறையில் உடல் நல குறைவு, விபத்து தற்கொலை என கடந்த 4 ஆண்டுகளில் 1347 பேர் பலியாகியுள்ளனர்.
காவல்துறையில் மொத்தம் 1.18 லட்சம் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணிசுமை குடும்ப சூழலால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் நலம் பாதிக்கின்றனர். சிலர் மதுவிற்கும் அடிமையாகின்றனர்.தவிர சாலை விபத்துகளில் போலீசார் இறப்பதும் தொடர்கிறது தற்கொலையும் நடக்கிறது இந்தாண்டில் கடந்த மாதம் புற்று நோய்க்கு 2 பேர் தற்கொலை 3, விபத்து 3, மாரடைப்பு 4, உடல் நல குறைவு 12 பேர் என மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 2021 ல்தான்கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 414 பேர் பலியாகியுள்ளனர் 2020 ல் 337 பேர்2022 ல் 283 பேர் 2023 ல் 313 பேர் என மொத்தம் 1347 பேர் பலியாகியுள்ளனர்
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுவதாவது போலீசார் அவர்களின் குடும்பத்தினரின் மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது மதுரை நகரில் போதையில் இருந்து சில போலீசாருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது அவர்களுடன் சமீபத்தில் கமிஷனர் லோகநாதன் அவர்கள் கலந்துரையாடினார் முன்பிருந்த பணி சுமை என்பது இப்போது இல்லை வாரம் ஒருநாள் ஓய்வு பிறந்த நாள் திருமண நாளில் சிறப்பு விடுப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. என்றார்.
