
திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் மோதல் ஒருவர் காயம், போலீசார் விசாரணை
திருநெல்வேலி மத்திய சிறையில் ஒரே வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இச்சிறைறில் 1300 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் 2019 ல் தூத்துகுடியில் நடந்த சிவகுமார் கொலை வழக்கில் கைதான மருதுவேல் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் இங்கு ஒரே செல்லில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் பாலசுப்ரமணியம் சுந்தர மூர்த்தி ஆகியோர் சேர்ந்து மருதுவேலை சாப்பாட்டு தட்டை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கினர் பலத்த காயத்துடன் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிட்சையில் உள்ளார் பெருமாள்புரம் காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
