
காவல்துறையில் பெண்களுக்கு பணி வழி காட்டும் ஆலோசனை குழு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு
தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களின் மன அழுத்தத்தை போக்க முதன்முறையாக பணி வழி காட்டும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் கிரேடு 2 முதல் டி.ஜி.பி., வரை 23,502 பெண்கள் பணிபுரிகின்றனர்.
குடும்பத்தையும் கவனித்து கொண்டு போலீஸ் பணி பார்ப்பது என்பது சவாலாக உள்ளது. சில பெண் போலீஸ் குடும்பங்களில் கணவன் பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படும் போது பணியில் சக போலீசார் அதிகாரிகளாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் கூட மதுரை நகர் ஆயுதப்படையில் குடும்பப் பிரச்சனையில் கிரேட் 1 போலீஸ் சரண்யா தற்கொலை செய்து கொண்டார் இது போன்ற சம்பவங்களை தடுக்க. முதன்முறையாக பெண் போலீஸ் அதிகாரிகளுக்கென தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணிவழி காட்டும் ஆலோசனைக்குழு DGP சீமா அகர்வால் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது உளவியல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் பணியில் திறம்பட செயல்படவும் குடும்ப வாழ்க்கை முறையை மேம்படுத்தி கொள்ளவும் கவுன்சிலிங்க் அளிக்கப்பட உள்ளது இதற்காக காவல் உதவி என்ற செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
