
நாலாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முதல் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை!
குஜராத் மாநிலம் கம்பிலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோலாங்கி. 40 வயதான இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்ற செய்தி கிடைத்த உடன் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் கோபமாக இருந்த அவர்நேற்று தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசியுள்ளார். பிறகு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்