மதுரை மெகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த SSகாலனி போலீசார்
மதுரை மாநகர் S.S.காலனி, C3, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் காலை 9 மணியளவில் நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதை பற்றி தகவல் கொடுக்க தகவலை பெற்று கொண்ட சார்பு ஆய்வாளர் திரு விஜயகுமார் அவர்கள் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்களுக்கு தகவல் கூறி அவரது அனுமதியுடன் நிலைய அலுவலில் இருந்த தலைமை காவலர் திரு. சரவணக்குமார், முதல் நிலை காவலர் சந்தோஷ்குமார், ஆகியோர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது காவலர்களை பார்த்தவுடன் அங்கே அவர்கள் தப்பியோடு முயன்ற போது காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவர்கள் மதுரை, SS காலனி, அம்பேத்கார் நகர், சரவணன் மகன் வீரமணிகண்டன் வயது 20/21, வைத்தியநாதபுரம் ஜெயராமன் மகன் வீரேந்நிரகுமார் வயது 38/21, மெகபூப்பாளையம், அன்சாரி நகர், ராஜன் மகன் விஜயகுமார், வயது 34/21 என தெரிய வந்தது. இதில் எதிரி வீரமணிகண்டன் பழைய குற்றவாளி என்பதும் இவன் மீது ஏற்கனவே மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் தெரிய வந்தது. இவர்களை சோதனை செய்த போது அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 2.150 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்களை கைது செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்களின் உத்தரவின்பேரில் திரு. விஜயகுமார், சார்பு ஆய்வோளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்