
மதுரை தத்தனெரியை சேர்ந்த 19 வயது வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை, தத்தனெரி, கீழ வைத்தியநாதபுரம், K.V. சாலை, இந்திரா நகர் 2 வது தெருவில் வசித்து வரும் முத்து என்பவரது மகன் பூமிநாதன்என்ற பூமி வயது 19, இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காரணத்தால் காவல்துறையின் கண்காணிப்பிற்குள் வரப்பட்டவர் இவரது தொடர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுதும் வகையில் இவரை கடந்த 5ம் தேதியன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
