Police Department News

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்ட பெயர் கூடாது, நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்கு நபர்களுக்கு பட்ட பெயர் கூடாது, நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு, பட்டப் பெயர் சூட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என போலீசாருக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 27, இவர் 2022 ஜூலை 14 ல் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக கூறி அரும்பாக்கம் போலீசாரால் F.I.R., பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் இந்த F.I.R., ல் இவரது பெயர் குரங்கு சரவணன் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.
இதில் அவர் கூறியதாவது பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதி தனிப்பட்ட, கலாச்சார, குடும்ப, வரலாற்று தொடர்புகளை ஆழமாக எடுத்து சொல்லுபவை பெயர்கள் நாம் யார், நாம் சார்ந்திருக்கும் சமூகம் என்ன உலகில் நம் இடம் என்ன என்பன போன்றவற்றை நமக்கு உணர்த்துகின்றன பெயரை மாற்றுவது என்பது தனிப்பட்ட ஒருவரின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார் கண்ணிய குறைவான பெயர்களை சூட்டக்கூடாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை குரங்கு சரவணன் என F.I.R. என்ற முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பட்ட பெயர் சூட்டுவது என்பது அவர்களின் மனித உரிமையையும் அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையையும் மீறுவதாக அமையும்.

எனவே இது போல அடைமொழிகளை வைத்து குற்றம் சாட்டப்பட்ட. நபர்க ளை அழைக்கும் நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும் அதற்கான உரிய அறிவுறுத்தல்களை காவல் துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.