
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அசிங்மாக பேசியதை கண்டித்தவருக்கு அடி உதை
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பி6 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான நேதாஜி தெருவில் வசித்து வருபவர் முத்துசாமி என்பவர் மகன் குமரன் வயது 56 இவரது தம்பி திருப்பதி ராஜாவும் அதே வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 13/3/24 இரவு சுமார் 11.30 மணியளவில் அவர் வீட்டு வாசலில் சிலர் அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தது கேட்டு அவரும் அவரது தம்பி திருப்பதிராஜாவும் வெளியே வந்து ஏன் வீட்டு வாசல் அசிங்மாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்கவே பேசிக்கொண்டிருந்தவர்கள் கோபமடைந்து நாங்கள் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி எங்களயே கேள்வி கேட்டு எதிர்த்து பேசுகிறாயா என கேட்டு இருவரையும் கீழே தள்ளி விட்டு காலால் உதைத்து காயப்படுத்தியும் அவர்களது இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியும் மிரட்டல் விட்டனர் இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வரவே அவர்களையும் கொலை மிரட்டல் விட்டு தப்பி சென்றனர் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அண்ணன் தம்பி இருவரும் ஜெய்ஹிந்த்புரம் பி.6 காவல் நிலையம் வந்து தங்களை அடித்து இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றவர்களின் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர் மேற்படி புகாரின்படி காவல் நிலைய குற்ற எண். 104ன்படி சட்டப்பிரிவு IPC 294(b), 323, 506(ii), 3 of TNPPL படியும் எதிரிகளான அதே பகுதியை சேர்ந்த குட்ட அஜீத் வயது 27, வில்லாபுரத்தை சேர்ந்த சூம்பி சதீஷ் வயது 23, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த எம்டன் மணி வயது 24, மற்றும் அதே பகுதியை சேர்ந்த கரடி நரேஷ் வயது 19 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
