
மதுரையில் தொழிலகப் பாதுகாப்பு படை அணிவகுப்பு
மதுரை தேனி விருதுநகர் லோக்சபா தொகுதிகளை உள்ளடங்கியது மதுரை மாவட்டம் இங்கு லோக்சபா தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது உறுதி செய்து பாதுகாப்பை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்
இதில் சட்ட ஒழுங்கு ஆயுதப்படை பெண் போலீசார் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த அணிவகுப்பை ஒத்தக்கடை நரசிங்கம் ஆர்ச் பகுதியில் இருந்து ஊமச்சிகுளம் ஏடிஎஸ் பி. சந்திரசேகரன் துவக்கி வைத்தார் ஒத்தக்கடை வேளாண் கல்லூரியிலிருந்து திருமோகூர் வழியாக ஐகோர்ட் கிளை சென்று நிறைவடைந்தது போக்குவரத்து போலீஸ்சார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
