Police Department News

தேர்தல் அமைதியாக நடக்க பழைய குற்றவாளிகளை ஆஜர் படுத்தி உறுதிமொழி பத்திரம் வாங்க போலீசார் மும்முரம்

தேர்தல் அமைதியாக நடக்க பழைய குற்றவாளிகளை ஆஜர் படுத்தி உறுதிமொழி பத்திரம் வாங்க போலீசார் மும்முரம்

லோக்சபா தேர்தலை எந்தவித அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அவ்வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கொலை அடிதடியில் தொடர்புடையவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆர்டிஓ விசாரணைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர் ஆஜர் படுத்தப்படும் அவர்கள் எந்த பிரச்சினையிலும் ஈடுபடமாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்த பின் இரு நபர் ஜாமீன்களில் விடுவிக்கப்படுவர் தொடர்ந்து அவர்களை போலீசார் கண்காணிப்பது வழக்கம்

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன பழைய குற்றவாளிகள் பிடிவாரண்டு குற்றவாளிகள் பற்றிய முழு விவரங்களை ஸ்டேஷன் வாரியாக போலீசார் சேகரிக்கின்றனர் அவர்களை உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஆர்டிஓ மற்றும் மாநகரில் துணை கமிஷனர்கள் முன்பு ஆஜர் படுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுருத்தப்பட்டுள்ளனர் இப்பணிக்காக போலீசார் மும்முரமாக செயல்பட. முடிக்கி விடப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.