






சிலை திருட்சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு திடீர் பரிசோதனை நடந்தது.டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு திடீர் பரிசோதனை நடந்தது.

இதில் சிறப்பு திருட்டு தடுப்பு காவல் ஆய்வாளர் பிரிவினரால் மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்இதில் 6 சாமி சிலைகள் ஒரு திருவாச்சி மீட்கப்பட்டது.
திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 19 03 2024 அன்று மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின் ராஜ் என்பவரது வீட்டில் தனது காவல் குழுவினர்களுடன் தணிக்கை செய்தார். தணிக்கை செய்ததில் ஒரு விநாயகர் சிலை கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இந்த சிலையானது விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் இந்த சிலையை திருடுவதற்கு உறுதுணையாக இருந்த மூன்று பேரை
ஜோசப் கென்னடி, டேவிட் ,மற்றும் அன்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர
மேலும் இவ் வழக்கு தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்றப் பிரிவின்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் 19 03 2024 வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு (TN55BW1121) என்ற எண்ணுள்ள பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் பழமையான அம்மன் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அந்த சிலை மீட்கப்பட்டது.
இந்த சிலை கடத்தலில் ஈடுபட்ட அஜித் காரைக்குடி ஸ்ரீராம் கோவில்பட்டி அகமது விருதுநகர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவ் வழக்கு தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்றப் பிரிவின்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போல் விழுப்புரம் சரகம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் தனிப்படையினருடன்
20 03 2024 அன்று விழுப்புரம் மாவட்டம் புலிச்சபள்ளம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கிருந்து 3 பெருமாள் உலோகச் சிலைகள் ஒரு அனுமான் சிலை (ராமர் மற்றும் லட்சுமணனை தோழில் ஏந்திய சிலை) மற்றும் ஒரு திருவாச்சி கைப்பற்றினர்.
இந்த சிலை திருட்டில் தொடர்புடைய பாரதிதாசன், நிசார், அகஸ்டின், மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவ் வழக்கு தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்றப் பிரிவின்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட வழக்குகள் சம்பந்தமாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறு நபர்கள் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்

