Police Department News

நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்

நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்

கணவன் தலைமறைவுநித்திரவிளை : நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது.

குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பேச்சு மூச்சு இல்லாமல் ஷானிகாவை அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் ஷானிகாவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

தொடர்ந்து உடலை கேட்டு தகராறு செய்ததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் ஷானிகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு குரல்வளை உடைந்ததால் தான் இறந்திருப்பது உறுதியானது.

ஷானிகாவின் கடைசி நிமிடங்கள் மிகவும் சித்ரவதை அனுபவித்து இறந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே ஷானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் அல்லது யாரேனும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற இரண்டு வாய்ப்பு மட்டுமே இருக்கலாம் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இதையறிந்ததும் தனது மகளை கணவர் வீட்டினர் கொலை செய்துவிட்டதாக கூறி ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் (65), நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.