Police Department News

காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி டி.ஜி.பி., ஆய்வு

காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி டி.ஜி.பி., ஆய்வு

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மாவட்டம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுவரும் தமிழக காவல்துறை இயக்குனர் திரு சைலேந்திரபாபு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவகத்தை பார்வையிட்டார் மேலும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் காவல்துறையிலுள்ள பல் வேறு பிரிவினருக்கு தேவையான அறைகள் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு பணியை மேற்கொண்டார் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி.,சைலேந்திரபாபு அளித்த பேட்டியில் கூறியதாவது தமிழகத்திலுள்ள எல்லை பகுதிகளான கோவை தேனி கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லையோர சோதனை சாவடிகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் காவலர்கள் சோதனைச்சாவடியில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அதே போல் தமிழகம் முழுவதும் காவல் துறையினறால் நடத்தப்பட்ட 3 கஞ்சா தடுப்பு ஆப்பரேசன் போது 20,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 2000 பேர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 750 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் போதையில்லாத தமிழகம் உருவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதே போல் இப்போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாற்று வழியை தேடி போதை மாத்திரைகள் உள்ளிட்ட பழக்கத்தை நாடி செல்வதாக தகவல் வருகிறது அதனை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.