Police Department News

தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

தருமபுரியில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் நர்சிங் கல்லூரி உயிரிழந்ததால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் சோளக்கட்டையை அடுத்த லாழாய்க்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்

தங்கராஜ். இவரின் மகள் காயத்ரி தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில

நாட்களுக்கு முன்பு காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரிசெய்ய மருத்துவர் ராஜேஷ் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, ரூ.50,000

செலவாகும் என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அதே மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு காயத்ரி வந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ராஜேஷிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் ராஜேஷ், காயத்ரியை சோதனை செய்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் காயத்ரியின் உடல் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மற்ற உடலுறுப்புகள் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காயத்ரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை எனவும். எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.