மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாள் வைத்திருந்த நபர் கைது
எஸ். எஸ். காலனி போலீசார் தேனி பிரதான சாலையில் உள்ள விராட்டிபத்து சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது டூவீலரில் வந்த 19 வயதுள்ள வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் 50 சென்டிமீட்டர் அளவுள்ள பெரிய வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த 19 வயதுடைய வாலிபர் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வாளை பறிமுதல் செய்த போலீசார் 19 வயதுடைய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.