நடமாடும் கழிப்பறை வாகனங்களை இயக்க வேண்டும் போலீசார் வேண்டுகோள்
வி.வி.ஐ.பி., களின் பாதுகாப்பு, திருவிழா, மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் போலீசார் இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக வாங்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் இதை மறுத்து வந்துள்ளனர். சென்னை மாநகர போலீஸில் மட்டும் பத்து நடமாடும் கழிப்பறை வாகனங்கள் உள்ளன. இதில் போக்குவரத்து போலீசாருக்கு இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு இந்தியன், இரண்டு மேற்கத்திய வகை கழிப்பறைகள், மற்றும், உடை மாற்றும் அறைகள் கை கழுவ இரண்டு வாஸ்பேஷன்கள் உள்ளன. இந்த வாகனங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு வாகனம் தினமும் தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டு ஆண் பெண் போலீசார் பயன்படுத்தி வருவதாக கூறி வந்தனர் ஆனால் இந்த வாகனங்கள் முறையாக இயக்கப்படுவதில்லை என மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து பெண் போலீசார்கள் கூறியதாவது லோக்சபா தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மாலை 5 மணிக்கு ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்றால் தாங்கள் அதிகாலை 5 மணியிலிருந்து அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டியது உள்ளது.
தலைவர்கள் செல்லும் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எங்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க வசதி இல்லை வீடுகளில் கேட்கவும் தயக்கமாக உள்ளது வெயில் வாட்டுகிறது இதனால் இயற்கை உபாதையை கழிக்க வேண்டுமே என்பதற்காக போதுமான அளவு தண்ணீர் கூட குடிப்பது இல்லை எங்களுக்கு பணி ஒதுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த இடத்தின் சூழல்கள் தெரியும் இதற்கு ஏற்ப ஆண் பெண் போலீசாருக்கு வழங்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வாகனங்களை இயக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்