
மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பெண்கள் சிக்கினார்
மதுரை தல்லாகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வம் இவருடைய மனைவி புஷ்பவல்லி வயது (65) சம்பவத்தன்று இவர் நகைகளை அடகு வைப்பதற்காக மேலமாசி வீதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நகையை அடகு வைக்காமல் வீட்டிற்கு புறப்பட்டார். அதற்காக அவர் ரயில் நிலையத்திலிருந்து தல்லாகுளத்திற்கு ஆட்டோவில் ஏறினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் பையில் வைத்திருந்த ஐந்து பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் பயணித்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த சோனா வயது (35) செல்வி வயது (57) ஆகிய இருவரும் நகையை திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
