
மதுரை பாலமேடு அருகே பெட்டிக்கடையில் பணம் திருட்டு
பாலமேடு அருகே பெட்டிக்கடையில் ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் அவர்கள் பாலமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
