மதுரை மாநகரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 13 பேர் கைது
மதுரை மாநகரில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எஸ்ஐ சந்தான போஸ்க்கு கீரை துறை இருளப்பசாமி கோயில் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த அழகு வயது (24) விக்னேஸ்வரன் வயது ( 22) கிழக்குத் தெருவை சேர்ந்த இளம் பரிதி வயது(25) பாரத் வயது (20 ) 19 வயதுடைய வாலிபர் மற்றும் மேற்கு தெருவை சேர்ந்த காமேஷ் வயது ( 23 ) எனவும் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள் வெட்டுக்கத்தி கொச்சைக் கயிறு மிளகாய்ப்பொடி பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் கோசா குளம் அய்யனார் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கருப்பையாபுரம் கற்பக விநாயகர் தெருவை சேர்ந்த பாண்டித்துரை வயது (42 ) என்பவரை கூடல் புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் செல்லூர் சத்தியமூர்த்தி ஆறாவது தெரு அருகே முட்புதரில் பதுங்கி இருந்த செல்லூர் பூமி உருண்டை தெருவை சேர்ந்த அப்பாஸ் வயது ( 22) 19 வயதுடைய வாலிபர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று வாலிபர்களை செல்லூர் போலீசார் கைது செய்தனர் மற்றும் சிந்தாமணி கிழக்குத் தெரு பகுதியில் கீரை துறை காவல் நிலைய எஸ்.ஐ மணிமாறன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்த பங்க் மணி வயது (32 ) கிளி கார்த்திக் வயது (39) செந்தில் முருகன் வயது (32 ) எனவும் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள மூவரும் கொலை முயற்சிக்காக பதுங்கியிருந்ததும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர் இவ்வாறு ஒரே நாளில் 13 பேரை ஆயுதங்களுடன் சுற்றியதாக கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.