
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மதன் சங்கர் என்ற பாலசந்தர் வயது (42) இவர் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையாளர் ஜே.லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மாநகர போலீசார் சங்கர் என்ற பாலசந்தரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
