
மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
மதுரை மேல அனுப் பானடி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் மாரியப் பன் (வயது 58). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த மாரியப்பன் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனையூர் ராமமூர்த்தி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அழகேசன்(57). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகே சன் கைலியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டியூர் சங்கு நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(32). கருத்து வேறுபாடு காரண மாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரகாஷ் வீட்டில் மின்சார வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
