


கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைவரும் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி முடித்து கிளம்பும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து 18-ஆம் படி கருப்பசாமி கோவில் , தமிழ் அன்னை சிலை, கோரிப்பாளையம் தேவர் சிலை ,ஆழ்வார் புரம் இரக்கம், வைகை ஆற்றில் சாமி இறங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர்,மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர், அறநிலையத்துறை துணை ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு கள்ளழகர் சாமி வரும் பாதைகளில் இடையூறாக காணப்படும் மேடு, பள்ளங்கள்,மின் கம்பங்கள் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மண்டகப்படிகளில் அதன் உறுதி தன்மை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல் முதலியன குறித்தும் ஆய்வு செய்தனர்
